Wednesday, 31 January 2018

சந்திரகிரகணம் கடைபிடிக்க வேண்டியவை சில

சந்திரகிரகனத்தின் போது  நாம்  திட ஆகாரத்தை தவித்தல் நல்லது.

மேலோங்கிய  சிந்தனைகள், வளர்ச்சியான  பூரிப்பான எண்ண   மன

அதிர்வலைகள்  நம்மிடையே  உற்பத்தி செய்து கொண்டு, மந்திர உச்சாடனங்கள்

தெரிந்தால்  ஜப்பித்துகொண்டும்  இருத்தல்  நல்லது.மனோகாரகன்  கடுமையாக

பாதிக்கபடுவதால்,  தீய குடூரமான  சிந்தனைகளுக்கு  இடம்  கொடுக்க வேண்டாம்.  பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்  சந்திர தசை நடந்து கொண்டு  இருப்பவர்களும்

சந்திரன்  ஜாதகத்தில்  எட்டு  பன்னிரெண்டாம்  பாவ தொடர்பு  கொண்டு,

லக்னம்  நான்காம் பாவம் ஆறாம் பாவம்   எட்டாம் பாவம்  பன்னிரெண்டாம் பாவங்களின்  துணை  கிரகமாகவோ,  துணை துணை கிரகமாகவோ

அமைந்த ஜாதகர்கள்  அவசியம்  பரிகார சாந்தி  செய்து கொள்ளுதல் நலம்

இவைகள் அன்றி    2, 11, 20, 29  தேதிகளில்  பிறந்தாரும்  பரிகாரம் செய்தல்
நலம்.

மதுர்கரகன் போற்றி என்று  ஜெபித்தல்  நலம் பயக்கும்.

























Sunday, 14 January 2018

தை முதல் அடுத்த தை வரை பொதுவான பலன்கள்

சூரிய பகவான் மகர மாச   நுழைவு என்பது  இன்று மதியம்தான்.  இந்த பலாபலன்கள்

சூரியனின்  அமர்வை வைத்து சொல்லுபவை. பொதுவான பலன்கள்  நீங்கள்

அறிய போகின்றவை.

அரசாங்கம்  பற்பல இடர்பாடுகளுக்கு  இடையில்,கஷ்டங்களை  சந்தித்து

பண பலத்தாலும்  வாய் சாதுர்யங்களாலும்  எதிர்கொண்டு  தக்கவைத்து

கொள்ள முயற்சிக்கும்.  அரசாங்கத்திற்குகேளிக்கைகளின் மூலமும் வருவாயும்

அதிர்ஷ்டத்தின்  வாயிலாக  தப்பிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

தண்ணீர் நிலை  பெருகும்.  நாட்டின் தண்ணீர் தேவைகள்கூட  சீர்

செய்யப்பட்டு பெண்களும்  மக்களும் மகிழ்வுற  வருணபகவான்  துணை உண்டு. அரசாங்கத்தின்  பெயரும் தப்பிக்கும்.  சிரத்தையுடன் முயற்சிக்கும்

ரியல் எஸ்டேட்  சராசரியாக  ஓடும்.  அபிரீதமாக ஓட வாய்ப்புகள் இலலை.

போலீஸ்  துறை ஓடிக்கொண்டு இருக்கும். நன்றாக, எப்போதும் போல.

கணினி  மற்றும் எழுத்து  துறை  கல்விக்கூடங்கள்  வியாபாரிகள்,டாகுமென்ட்
எழுத்தர்கள்  நிலை நல்ல படியாக இருக்கும்.

 சக்கை போடு போடும். திருப்பதி  கோவில் வருமானம்  பெருகும்..  பக்தர்கள் அலைமோதுவார்கள்

குழந்தைகள் பாடு கொண்டாட்டம் தான் .  சிவன் கோவிலில் கூட்டம் அலை மோதும்.  பிரதோஷ வழிபாடு  சிறந்து விளங்கும்.. வங்கியில் கூட்டம்

அலைமோதும்.வங்கி கஜானா  சிறப்பாக இருக்கும்.  தங்க வியாபாரிகள் பாடு கொண்டாட்டம் தான்.

பெண்கள்  வழியில் சந்தோஷம்,  பல இடர்பாடுகள் மற்றும்  தடங்கல்கள்

போராட்டங்கள் இவைகளை தாண்டித்தான்

அடித்தள மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கம்   வாழ்வில் அலைச்சலுடன் கூடிய  வருமானம் தான்..


எப்போதும் போல் சினிமாக்காரர்கள்   வியாபாரம் கொடிகட்டி பறக்கும்

வெளிநாடுகள் சப்போர்ட்  சிறப்பான முறையில் உண்டு  வெளிநாட்டு

முதலீடுகள் வந்து குவியும். தோல் டாக்டர்கள்பா டு கொண்டாட்டம் தான்.  மின்சார துறையில் அளவோடு முனேற்றம் உண்டு.

ஞானமார்க்கம்  தெளிவைடைந்து  அனைத்து மக்களையும் ஈர்க்கும் பிள்ளையார் கோவிலில்  கூட்டம்  நிரம்பி வழியும்.

ரகசிய புலன் ஆய்வு துறை நல்ல பெயரை ஈட்டும் . விசாரணை கமிஷன்
ரிபோர்ட் தெளிவு உண்டாக்கும் மக்கள்மத்தியில். முன்னேற்றமான நிகழ்வுகள் உண்டு.    சூரியபகவான் போற்றி  போற்றி..




சூரியனின் மகர மாச நுழைவு எப்படி இருக்கும்? பாருங்கள்


Sunday, 7 January 2018

ரஜினி ஜாதகம் சொல்வது என்ன? பார்போம்

                             ரஜினி ஜாதகத்தில் மிக அற்புதமாக இருக்கின்ற  கிரகம்

சுக்கிரன் மற்றும் கேது பகவான்  நூறு  சதவிகிதத்தை  எட்டுகின்ற் படியால்

திரை துறையில்  கொடிகட்டி  பறந்தார்.  கேது  நல்ல நிலையில் இருக்கின்ற

காரணத்தால்  ஞானமார்கத்திலும்  அவரால்  எட்ட முடியும்.

அரசியலில் வந்து  பிரகாசித்து  நாட்டு  மக்களுக்கு  நன்மை புரிய வேண்டும் என்றால்  சூரியன்  மற்றும் செவ்வாய்  அற்புதமாக இருக்கவேண்டும்.

இதனில்  செவ்வாய்  நன்கு உள்ளது.  இருப்பினும்  சூரியன்  அக வாழ்வுக்கு

 பயன் படுகின்றதே  ஒழிய  புற வாழ்கைக்கு  பயன் படவில்லை.

இவர்  அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்தாலும்  தொடர்ந்து அதில்
இல்லாமல் விட்டுச் சென்று விடுவார்..  வேறு யாரிடமாவது  ஒப்படைத்து

விட்டு  வெளியேறிவிடுவார்.  அந்த  பாக்கிய சாலி யாரோ?  தமிழக மக்கள்

என்ன  செய்யப்போகின்றார்கள்   பொருத்து இருந்து  பார்போம்......


SUPER STAR RAJINI HOROSCOPE WHAT IT SAYS?