Tuesday 27 June 2017

சீமந்தம் வைபவ நாள் குறிப்பது எவ்வாறு?

சீமந்த  வைபவ நிகழ்ச்சி  ஒரு பெண்  கர்ப்பம் தரித்து எட்டாம் மாதம்

ஆரம்பித்து    ஒன்பதாம் மாதம் முன்  பெண்ணை அலங்கரித்து

அனைத்து  உபசாரங்களையும்  செய்வித்து  பெண்ணை மகிழ்உர செய்து

பின் வரும் மாதங்களில்  அதே  மகிழ்வோடு பயணித்து,  பிரசவிக்க செல்லும்

காலம்  முன்  நம்பிக்கையோடு  சென்று,  பிரசவித்து, ஆண்  அல்லது  பெண்

குழந்தையை   பெற்றோர்களுக்கு  பேரக்குழந்தையாக  அளிப்பார்கள்.

தாய்க்கு   செய்யும்  வைபவம்,  நாள்   குறித்து  செய்ய வேண்டும்.

நல்ல நாள்   பார்த்து   செய்தாலும்,  நக்ஷத்ரம்  பார்த்து  செய்யவேண்டும்.

தாயின்  வயிற்றில்  அமர்ந்து  இருக்கின்ற குழந்தை  எந்த  நக்ஷத்திரத்தில்  வளர்ந்து

வருகின்றதோ  அதை கண்டுபிடித்து   ,   அதை பொருத்து  நாள் குறிக்க

வேண்டும்..தாயின்  வயிற்றில்  வளரும் குழந்தையின்  தெசையை  கண்டறிந்து

அந்த நட்சத்திர  நாயகனை   கண்டறிந்து   நாள் குறித்து  தரும்   ஜோதிடர்கள்

இருக்கின்றார்கள்   என்பது  அபூர்வமானது மட்டுமல்ல  அப்பிடிப்பட்ட

ஜோதிடர் உங்களுக்கு  அமைந்தால்  கடவுளின் கொடுப்பினைதான்.  குழந்தையும்  தெய்வக்  குழந்தையே.!!!!  ஆண்  பெண்  குழந்தை  அறிதல்

மட்டும்.சட்டப்படி குற்றமாகும்....நக்ஷத்ரம்  அறிந்து  வைபவம்  கொண்டாடுதல்  குற்றமாகாது.   நல்ல  ஜோதிடரை நோக்கி  படையெடுப்போம்.   எல்லாம்  அவனுடைய  விளையாட்டே???

Saturday 10 June 2017

வடமேற்கு மூலை யாருக்கு யோகம் தரும்?

வடமேற்கு  மூலைக்கு  சொந்தக்காரர்   கேதுபகவான். இவர் இந்த இடத்தை

ஆக்கிரமிப்பு   செய்கிறார்.  பெரும்பாலும்  தனிவீடுகளில்   இந்த  வாசல்

அமைவதில்லை.   கிராமங்களில்  இந்தவாசல்  வீடுகள்   அமைவதுண்டு.

பெரும்பாலும்  நகரங்களில்   பிளாட்  சிஸ்டம்  வீடுகளில்  இந்த வாசல்

அமைவது  தவிர்க்க முடியாதது.  இது என்ன செய்யும். இதன் சிறப்பு என்ன?

இந்தவாசல்  குடும்பத்தாரை  அஞ்ச வைக்கும்.   நிலையாக  உட்காரவைக்காது.

ஓடியோடி  சென்று  சம்பாதித்து  வீடு திரும்பினா  வீட்டுலும்  பிரச்சனைதான்

வீட்டில் ஒரே  வாக்கு வாதம்தான்.  அம்மை  வைசூரி  கட்டிகள், தீர்க்கமுடியாத

வியாதி,   கான்செர்  போன்ற நோய் கள்.  இவைகள்   உறவுகரர்களாகி

சொந்தம் கொண்டாடி,  கழுத்தை பிடித்து  தள்ளினாலும்  வெளியில் செல்லாமல்

சண்டித்தனம்  செய்துகொண்டு   உட்கார்ந்து  கொண்டு இருக்கும்.  நன்மை

என்றால்  குடும்ப  தலைவரின்  ஜாதகத்தை  பார்த்தால்   குரு  பார்வையில்

கேது  அல்லது  குருவுடன்  இணைந்த கேது இருப்பின்,  கேது  திசையில்

பிறந்தவர்கள்   வீட்டில் இருப்பின், அல்லது   கேது தெசை  நடந்து கொண்டு

இருந்தாலும் அல்லது  லக்ன   துணை  கிரகம்   கேது வாஹ   இருந்து

லக்ன பாவ  கொடுப்பினையில்   கேது  நல்ல இடங்களை  பிடிதிக்கொண்டு

இருந்தாலும். இந்த வீட்டு வாசல்  இந்த வீட்டில்  இருபவர்களை  ஒன்றும்

செய்யாது  என்பதைவிட    நல்ல முன்னேற்றம்  கொடுக்கும்.
செவ்வாய்  உச்சம் பெற்ற  ஜாதகர்களுக்கும்   இந்த  வாசல் நன்மையை தான்

கொடுக்கும். இந்த  தலைப்பில்  மட்டும் ஒரு புத்தகம்  போடலாம்.  பார்போம்


Tuesday 6 June 2017

தென் மேற்கு மூலை வாசல் யாருக்கு யோகம்?

வீட்டின் வாசல் அமைவது அவரவர் யோகத்தை பொருத்துஅமையும்

எல்லோரையும் கவர்நது இழுக்கும்  வாசல்  கிழக்கு வாசல் மற்றும் வட

கிழக்கு  வாசல்.  இது எல்லோருக்கும் அமையும் என்று சொல்லமுடியாது.

தெற்கு வாசல்  இது பொதுவாக  போலீஸ் துறை, கட்டிட  பொறியாளர்கள்

ஒன்பதாம்  எண்  ஆதிக்கத்தில்  பிறந்த,  செவ்வாய்  உச்சம்  பெற்றவர்கள்

மேஷ, விருச்சிக,லக்னகாரர்கள்,  ரியல் எஸ்டேட் வணிகம்   செய்பவர்கள்,

இவர்களுக்கு  சிறப்பாக  இருக்கும்,   தென் மேற்கு மூலைக்கு  யார்  சொந்தக்

காரர்    யார் தெறியுமா?   ராகு  பகவான்  ஜாதகத்தில்  அற்புதமாக   இருக்க

வேண்டும்.  ராகு  கடகம்  சிம்மம் மேஷம்  போன்ற    ராசிகளில்  இல்லாமல்

இருத்தல் நல்லது.  ராகு  பகவான்   கார்த்திகை  உத்திரம்  உத்திராடம், ரோகினி

ஹஸ்தம், திருவோணம்   போன்ற   நட்ச்த்ரங்களில்  அமராமல் இருத்தல்

நல்லது..ராகு  உபய  லக்னங்களில்  அமராமல்  இருத்தல் நல்லது.

மேலும்  சந்திரன்  சூரியன்  இவர்களோடு  சேர்ந்து  இல்லாமல்  இருத்தல்

நல்லது.   கால சர்ப்பப  யோக  ஜாதகர்களுக்கு  இது  சிறப்பை தரும்.

ராகு தெசை  நல்ல இடத்தில  இருந்து  தெசை நடத்துமானால்  யோகம் தான்.

4,13,22,31.  இந்த தேதிகளில் பிறந்த  குடும்ப உருபினர்கள்  அதிகம் இருப்பின்

தென் மேற்கு  வீட்டு  வாசல் ஒன்றும் பண்ணாது  நல்லது. அப்புறம்பார்க்கலாம்.