Thursday, 21 September 2017

நவராத்ரியில் அம்பாளை பூஜிப்போம் வாருங்கள்.....

நவராத்திரி திருநாளில் வீட்டிலேயே இருந்து அம்பாளை பூஜிப்போம்.

வெளியூர் சென்றுவருவதை  தவிர்க்கலாம். ஒன்பது  நாட்களும்

ஒன்பது விதமான அலங்காரங்களில்  அம்பாளை உபசரித்து பூஜித்து

முடிந்தவரை  நவ தானியங்களை கொண்டு  தினமொரு  சுண்டல் செய்வித்து

அம்பாளை உபசரித்து  அழைத்து  இசைபாடி  மகிழ்வித்து நாமும் மகிழ்ந்து

அவளது அருளை பெறுவோம்.  ஒவ்வொரு  நாளும்  ஒவோரு வண்ண

ஜாக்கெட் துணி, வைத்து  நம்வீ  ட்டுக்கு வருகை புரியும்  பெண்களுக்கு

பிற பொருள்கள்  மற்றும்  தட்சணை  சுண்டல் வைத்து உபசரித்து  மகிழ்வோம்.

பத்தாவது  நாளில்  நாம்  திருநாளைபூர்த்தி செய்யும் விதமாக ஆயுத பூஜை

மற்றும் சரஸ்வதி பூஜை செய்து பூர்த்தி செய்து கோள்வோம்.  நவராத்திரி

திருநாளில் அம்பாளின் அருளை பெறுவதால் தாயின் கருணை நம் மீது

வீழ்ந்து நம்மை பீடித்த தரித்ரம் நம்மை விட்டு விலகும்.  மேலும் லக்ஷ்மி

கடாக்ஷம்  கிட்டும். சரஸ்வதியின் அருளால் ஞானம் பிறக்கும்.

அரசாங்கமே  பீடை நீங்கி விமோசனம் பெற இத் திருநாளை கொண்டாடி அம்பாளை மகிழ்விக்கலாம்.  நம் தமிழ்நாட்டில் தான் நாத்திக கருத்துகள்

ஓங்கி ஒலித்துகொண்டே இருக்குமே.  நாத்திகவாதியின்  குடும்பத்துக்கு மட்டும்

இது பொருந்தாது.  நாத்திகம்  வலுக்க  ஆஸ்திகம் வலுக்கும்.தமிழ் பெருங்குடி

மக்களின்  குணமும்  அதுதானே?  நம்பாதே என்ற  அதிர்வுகள் ஓங்கி

ஒலிக்கும் போது  நம்புவோம்  என்ற  அதிர்வு அலைகள்  பெருகத்தானே

செய்யும்.  ஆஸ்திகம்  சிறக்க  அதை வளர்க்கும்  சக்தி   நாத்திகத்திற்கு தான் உண்டு.

நாத்திகமும்  ஊரோடு  இருக்கட்டும். ஆஸ்திகம்  பெருகட்டும்.

Sunday, 10 September 2017

மகாளயத்தின் மகிமை உங்களுக்கு தெரியுமா?

ஆவணி மாதத்தில் தேய்பிறையில்  வரும்  நாட்கள் நீட்சி பெற்று புரட்டாசியில் அமாவாசையை தொடும்  நாட்களே  மகாளயம்

என்று  மக்களால் போற்றபட்டு  புனித நாட்களாக  கொண்டாடப்பட்டு

நம் முன்னோர்களை  பூஜித்து வழிபட்டு வருகின்றோம். இந்த நாட்களிலேயே காவேரி புஷ்கரணி தேர்ந்தெடுத்தல் நீராடுதல் அமைவது. நம்

முன்னோர்களும் நாமும் சேர்த்தே நீராடுவோம் காவிரியில். இது இரட்டிப்பு

மகிழ்ச்சி. .தஞ்சை மாவட்டதில் பிறந்து தஞ்சையிலே வசித்து

வாழ்த்து வருவோர்க்கு இது வரப்பிரசாதமே. மகாளயத்தில் நமக்கு

என்ன நற்பயன் கிட்டும். நம்முனோர்களுக்கு செய்யவேண்டிய உபசார
அர்ச்சனை மற்றும் அவர்களுக்கு நாம் செய்விக்கும் உபசரணை

நிச்சயமாக அவர்களுக்கு இப்புலோகத்தில் நாம் அளிக்கும் விருந்து உபசாரங்களை

அவர்கள் ஏற்றுக்கொண்டு நம்மை காப்பார்கள்.

இதனில் ஒரு விசேஷம் என்னவென்றால் அண்ணா திராவிடா முன்னேற்ற

கழக நிறுவனர் எம்.ஜி. ஆர் அவர்களுக்கு

நூற்று ஆண்டு விழா எடுக்கும் இந்தவேளையில், அவருடைய உண்மையான

பக்தர்களுக்கும் அவர் ஆசிவாதம் கிடைக்கும் அதே போல் அம்மாவிற்கும்

அவர்தம் தொண்டர்கள் பூஜித்து அவர்களை மகிழ்விப்பது அம்மாவின் ஆசியை

பெற ஏதுவாகும். இதனை அவர்தம் தொண்டர்கள். புரட்சி தலைவருக்கும் அம்மாவிற்கும்,பூஜிக்கும்
இந்த மகாளய திருநாளில், அம்மாவும் புரட்சித்தலைவரும் இப்புலோகம் வந்து அருள் புரிந்து செல்லட்டும் வாழ்க     மஹாலய பட்ச திருவிழா நோன்பு..