Friday, 13 April 2018

விளம்பி வருஷம் காவிரியில் தண்ணீர் பெற்று தருமா?

14.04.2018 காலை 06.05 நிமிடத்தில் பிறக்கும் தமிழ் புத்தாண்டான விளம்பி

வருஷத்தை தமிழர்கள், போற்றி வணங்குவோம். இவ்வருட பலன்களில்,

ராசிகளுக்கு பலன் எழுத போன எமக்கு, பிடரியில், யாரோ, தட்டுவது போல்

இருந்தது. விழித்துக்கொண்டேன். காவிரியில், தண்ணீர் வந்தாலே, எல்லா

ராசிக்கும் நல்ல பலன் தானே.? இறை அருள் வேண்டுதல் செய்து, பலன்,

எழுதுகின்றேன்.  காவேரி வாரியம் அமைத்து தண்ணீர் கிடைக்குமா அல்லது

நல்ல மழை பெய்து, கரைபுரண்டு ஓடுவாளா  காவேரி. பலனை பார்போம்.

சூரியனை தவிர, அனைத்து கிரகங்களும், நம் தமிழகர்களின், மனசை

 குளுர்விக்க போகின்றதாக, பலன்கள்,பறைசாற்றுகின்றன. எப்படி.?

அரசியல் வாதிகளின்,  சூட்ஷி, பலிக்க போவதில்லை.  அனைத்துகிரகங்களும்,

ஒன்றுசேர்ந்து,  அரசியல் சூட்சியை, சாத்வீக, முறையினால், முறியடிக்க

போகின்றது. நிச்சயமாக, அறவழிபோராட்டம்,வெற்றி அடையப் போகின்றது.

அனைத்துகிரகங்களும், ஒன்றுசேர்ந்து,தமிழக மக்களின்

நீண்டகால,எதிர்பார்ப்பை

நிறைவேற்றி கொடுக்கபோகின்றது. பார்போம் காவேரியா, நல்ல மழையா?

பொருத்து இருந்து பார்போம். வெற்றி நிச்சயம்.

19.052018  யாம் எம்முடைய விளம்பி வருட,பலன் சொல்லும் பதிவில்

கூறியவை , பலித்துவிட்டது,  விளம்பி வருட பலன் பலித்துவிட்டது.

ஜோதிடம்,உண்மை என்பதை,பறைசாற்றி விட்டது.உண்மை ஜெய்த்து

 விட்டது.

வாழ்க ஜோதிடம் வளர்க ஜோதிடம், அனுதினமும் ஜோதிடத்தை சுவாசித்து,

ஜீவிப்போம்......




Sunday, 8 April 2018

காவேரி வாரியம் நடிகர்களின்,யதார்த்தமற்ற கண்டனக்கூட்டம்

காவேரி வாரியம் அமைக்காததை கண்டித்து அறவழி போராட்டம் நடத்திய

நடிகர்கள் சங்கமத்தில், தங்களுடைய, கண்டனத்தை தெரிவிக்கும் முகங்கள்,

ஒருசிலரிடம்,மட்டும்  காணமுடிந்தது, வருத்தத்துக்கு உரியதே.

திருமண, திரைப்பட விழாவில்,சந்தித்து,  கை குலுக்கி கொள்ளும்,

கலாசாரம், சிரித்து பேசிக்கொண்டு, நலம் விசாரிக்கும், கலந்துரையாடலை,

காணும்போது, தமிழக மக்களாகிய, நாம், எவளவு  கேனையர்கள்,என்பதை,

நமக்கு நாமே  சபாஷ், போட்டுகொண்டு, மார் தட்டி கொள்ள வேண்டும், என்று

நினைக்க தோன்றுகின்றது.  காவேரி  தண்ணீர், கரை புரண்டு, ஓடும் என்றே,

தோன்றுகின்றது.  தமிழகம் நிச்சயம் தன்னுடைய ஏமாளித்தனத்தில்,இருந்து,

விடுபட, வாய்ப்பு  இல்லை என்றே தோன்றுகின்றது. அப்பாவி தமிழக,

மக்களை,கடவுள், தான் காப்பாற்ற வேண்டும். தமிழக மக்கள்

இருந்தாலும் இவ்வளவு அப்பாவியாக இருக்கக்கூடாது.