Thursday, 25 May 2017

விவாகரத்து உண்டுபண்ணும் லகனங்கள் எவை?

விவாகரத்து  உண்டுபண்ணும் லக்னங்கள் என்று பார்த்தால் முதல்
தரமான  இடத்தை பிடிப்பது  உபய லக்னகாரர்களே !!!
இவங்க  முதல் இடத்தை பிடிக்க உதவும் கிரகங்கள்  புதனும் குருவும்.
எனுங்க  இவங்க இரண்டு பேரும்  சுப கிரகம்,  நல்லவங்க  என்று நாங்க நம்பி
வியாழக்கிழமையும், புதன்கிழமையும்  அர்ச்சனை  குருபகவனுக்கும்,
புதன் பகவானுக்கும், தவறாது செஞ்சுவரோமுங்க. அதிலும் அவங்களே
ஏழாமிடத்தை  அலங்கரித்து  நின்று கொண்டு இருந்தால்,  தசையும்
நடத்தினா, எங்க  வீட்டு  ஜோசியர விட மாட்டாரு,  அர்ச்சனை  பண்ணச் சொல்லி வற்புறுத்துவார்.
தோஷம்  செய்யும் பலசாலியை   மேலும்  பலசாலியாக  ஆக்கிவிடுவாரு.
அவராலே முடிஞ்ச கைங்கார்யத்தை  முடிச்சு  வப் பாரு!!  ஆமாம் ?
அடுத்த இடத்தை  பிடிக்கும்  கிரகம்  யார்  தெரியுமா?
 கன்னி  மற்றும்  மீன லகனகரர்கள்   லக்னத்தில்  சூரியன்  அமையப பெற்றால்
திசையும்  நடத்தினால்  விவாகரத்தை  முடித்து விட்டு தான் மறு வேலை
பார்ப்பார். அதவும் ரேவதிஉத்திரட்டாதி சித்திரை நட்சத்திரம் உட்கார்நதால் பாதிப்பு நிச்சயம்.
இப்பேற்பட்ட  படுமோசமான  தோஷங்கள்   திருமண  வாழ்கையை  ஸ்தம்பிக்க  வைக்கையில்  செவ்வாய்  தோஷம்  என்று சொல்லி
பல திருமணங்கள்  தள்ளி போடப்படுகின்றன.  ராகு  கேது  தோஷம்
என்று சொல்லி  பரிகாரத்துக்கு   தள்ளப்படுகின்றனார்.
ஏழாம்  பாவம்  ஆறாம்  பாவம்  எட்டாம்,  பன்னிரெண்டாம்  பாவம் , தொடர்பு
கொண்டு  லக்ன பாவ   கொடுப்பினையும்  கெட்டு போய்,  ஆணுக்கு
சுக்கிரனும்  பெண்ணுக்கு  செவ்வாயும்  கெட்டுபோய் இருந்தால்,   விவாகரத்து
உறுதி.
திருமண  ஒப்பநதம் என்பது  எவ்வளவு   சென்சிடிவ்  சப்ஜெக்ட்.  ஜாக்கிரதை
குழந்தைகளின்  வாழ்கையில் விளையாடாமல்  விளக்கு ஏற்றி  வை யுங்கள்.  வாழ்க வளமுடன். வம்சம் வளரட்டும்.

Thursday, 18 May 2017

ரஜினி அரசியலுக்கு வந்து முதல்வர் ஆவாரா?

ரஜினிகாந்த் அவர்களின் சரியான பிறந்த குறிப்புகள் இன்றி இதை கணித்து
சொல்வது கஷடம் என்றாலும்  பிரசன்ன ஜாதக குறிப்பு கொண்டு சொல்ல
முடியும் என்றாலும் தொலைகாட்சியில் அவர் அறிவித்த நேரம் சரியாக தெரியாத
நிலையில்,  கொஞ்சம் கஷடம் தான் ?
இருபினும் முயற்சியை கைவிடாத நிலையில்  வேறு வழிமுறைகளை
கையாண்டு நேரம் எடுக்கையில்   பதினெட்டாம் தேதி இரவு எட்டு மணி
எட்டு நிமிடம் என்ற ப்ரசன்ன கணக்கெடுப்பின் மூலம் நாம் அறியும்
பலன்கள்  கிழ்  கண்டவாறு வருகின்றது என்ற உண்மையை இங்கு
ஜோதிட ஆர்வலர்களும் தெரிந்து அறிந்து கொள்ளட்டுமே என்று இங்கே
பதிவு செய்கின்றோம்.
எந்தவித சுய லாபம் கருதியும் இதை வெளியிடவில்லை.
அ.    லக்ன பாவ கொடுப்பினை அற்புதமாக இருப்பதால் அவர் நினைத்த  குறிக்கோள் நன்கு தடையின்றி நிறைவேறும். இறைவன் துணை புரிந்தால்
ஆ.  ஆறாம் பாவம் எட்டாம் பாவம்  பன்னிரெண்டாம் பாவம்   எதுவும்
தலை தூக்க வாய்ப்புகள் இல்லை. அப்படிப்பட்ட  நிலை தமிழ்நாட்டில்
இன்றைய சூழ்நிலைகள்  இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை அநேக கட்சிகள் உதயமாகி   தமிழ நாட்டின் தலைமைபொறுப்பை அடைய நினைக்கையில்  ஒரு அசாதாரணமான  சூழநிலை தான் நிலவி வருகிறது
கட்சிகள்  உதய மாகும் நிலையில்  மீடியாக்கள் யூடுப்  பெருகிய நிலையில்   அரசியல் பிரவேசம் செய்தாலும் சொந்தவேலை பார்க்க மறுபடியும் சென்றுவிடுவர் என்றே காட்டுகின்றது.
இ.  அகம் சார்ந்த வாழ்கை மட்டுமே மிக சிறப்பாக இருப்பதால் நிமதியான குடும்பவாழ்க்கையை சிறப்பாக காட்டுகின்றது. ப்ரிச்சனையே இல்லாத குடும்ப சந்தோஷம் மிகுந்து காணப்டுகின்றது. இவ்வாறு இருக்கும் நிலையில்
அரசியல் பிரவேசம் இருக்காது. இருத்தாலும், நிலைத்து இருக்கவிடாது
நிம்மதியான வாழ்க்கையை நோக்கியே  பயணிக்கும்.  எனவே முன் கூட்டியே  தீர்மானிதத்து அரசியலில் பிரவேசிக்காமல் இருப்பது நல்லது. இன்றைய நல்ல பேரோடு
வாழ்க்கையை தொடர் ந்து பயணிப்பது தான்  நல்லது. இதுவேஆண்டவன்
கட்டளையாக கூட அவருக்கு கிடைக்கலாம்.   ஒன்பதாம் பாவம் கூட அதைதான் காட்டுகிறது
        எல்லாம் அவன் செயல்.  தமிழ்நாட்டில்  வேறு யாரோ வந்து பிரச்சனைகளை சமாளித்து மக்களுக்கு நன்மை செய்யட்டுமே 

Saturday, 13 May 2017

உயர் கல்வி படிக்க எந்த கிரகஹம் வேலை செய்யும்?

உயர்கல்வி என்ற ஸ்தானம் பறந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில்
மருத்துவ படிப்பு மட்டும் நாம் இருக்கும் வூரிலேயே படித்துவிட்டு
நாமிருக்கும்  வூரிலேயே  மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து பணிகிடைத்துவிட்டால் எல்லை இல்லா  மகிட்சி  நமக்கு தான்
அதற்கு  பூர்வ ஜென்ம கொடுப்பினை வேண்டும்.
ஆனால்  ஏனைய  பொறியியல் படிப்பு மற்றும இதர  படிப்பு
வகையறாக்கள்  படிக்க  இந்தியாவை  சுற்றிவரவேண்டும், ஏன் உலகத்தையே
சுற்றி வந்தாலும் ஆச்சர்யம் படுவதற்கு ஒன்றும் இல்லை.
அப்ப  எந்த பாவத்தை வைத்து  முடிவு எடுக்க  வேண்டும் என்றால்  9 ம பாவம்
மறறும  பன்னி ரெண்டாம்  பாவம்.  மற்றும்  தெசை  தொடர்பு,  மற்றும்
புதன் பகவான் நிலை  மற்றும் ராகு பகவன் அனுகிரகம்,  ஆறாம் பாவத்தின்
கடன் பெரும்  நிலை, மேலும் கடைசியாக   லக்னபாவ கொடுப்பினை  இறைவனின் அருள்  எவ்ளவு  வேலை இருக்கு  பார்த்தீங்களா?  நான் சொல்லறது   நல்ல கல்வி நிலையங்களில் பயின்று  நல்ல வேலையில்
அமர்ந்து  உயர்ந்த சம்பளம் பெற ,  எவ்வளவு  கஷ்டம்  பார்த்தீங்களா?
இத்துடன்  பிரசன்ன  ஜாதகமும்  போட்டு  பார்த்து பலன் சொல்ல வேண்டும்.
எல்லாம் அவன் அருள் கொண்டு நிறை  வேற்றிடவேண்டும்  பார்போம்........

Wednesday, 3 May 2017

பகவான் சனி ஹோரைபற்றி பொன்னான முத்துக்கள்

பகவான் சனி  ஹோரை பற்றிதெரிந்துகொள்ளும் முன் அந்த சசயோக சக்ர
வர்த்தி யை  அவர் பாதம் தொட்டு  போற்றி  வணங்கி  எழுதுகிறேன்.
சமுதாயத்தின் அடித்தள மக்களிடம் அவர்தம்வாழ்வில் பங்கு எடுப்பவர்.
கற்பிப்பதில் வல்லவர். பாடம் புகட்டுவதில் இவர் தான் அதாரிட்டி.
மந்த புத்திக்கு  சொந்தக்காரர்  ஆனால்  அழமாக  சிந்தித்து செயல் படுவார்.
நிதானமாக செயல் பட்டாலும்,இறுதியில்  வெற்றி இவருக்கே..
                                    அடித்தள மக்களை  நேசிபவர்களை இவருக்கு ரொம்ப
பிடிக்கும்.  ரொம்பவும்  சுத்தம்இவருக்கு பிடிக்காது.  பெரிய  மோசடி பொய்
பெரிய திருட்டு, இவர் அறியாதவை.  பின் இரவு தூங்கி,  முன் விழிப்பர்
சிலர் .   சூதாட்டம் இவருக்கு பிடிக்கும். வயோதிக தோற்றம்
இவருது அடையாளம்.  தாட்சண்யம்  இவருக்கு கிடையாது.  சிறுசேமிப்பு,
ஆயுள் காப்பீட்டின்  தொடர்பு இவருக்கு உண்டு. காலதாமதம்,சாக்குபோக்கு
இவருக்கு ரொம்ப பிடிக்கும்.  கலியுக ராமானுஜர்  மீது அளவுகொண்ட
பற்று கொண்டதினால்  120 ஆண்டுகள் இப்பூஉலகில்  வைத்து இருந்து  அடித்தள
மக்களுக்கு  ஞானம தந்து அவர்தம் வாழ்வில்நன்மைகள் செய்தார இவருக்கு
இறைவன் அளித்த பணி  ஒருவரது ஆயுளை  வைத்திருப்பது எடுத்துகொள்வது.  ஆயுள் காரகன்  இவரே. அதனால் தானே  இவரை பார்த்து பயப்படுவது
                                                    இவரது  அமரவு  ஒருஜாதகத்தில்  சசயோகம்
பெறுமானால்  அந்த ஜாதகரின்வாழ்வில் இவர் துணைநிற்பது திண்ணம்.
சசயோக சகரவர்த்தியின்  பாதம் தொட்டு  வணங்கி  விடை பெறுகின்றேன்.
இவரது ஹோரை  நீண்டகால பயன்தரும்  வேலைகளுக்கு  பயன்படும்.