Monday, 2 October 2017

கால சர்ப்ப தோஷமா கால சர்ப்ப யோகமா எப்படி கண்டுபிடிப்பது?

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?  லக்னத்தை உள் அடக்கி எட்டு


 அம்சம்களும், ராகு கேதுவின்  பிடிக்குள் அமர்த்தி பலன் கொடுக்க

ஸ்ரிஷ்டிக்க படுமே ஆனால், அந்த ஜாதகர்  கால சர்ப்ப தோஷ ஜாதகர்

ஆவார்.  இதனில்,  லக்னமோ ,லக்னாதிபதியோ சந்திரனோ, ராசினாதனோ

சூரியனோ,  தெசானாதனோ  ராகு கேது பிடிக்குள், மாட்டிக்கொள்ளாமல்

வெளியிலமர்ந்து  பலன்கொடுக்க  ஸ்ரிஷ்டிக்க, படுவார்களே ஆனால்

காலசர்ப்ப யோகம் என்ற நிலையை ஜாதகர் அடைகின்றார்.

காலசர்ப்ப தோஷம் ஜாதகரை  வாழ்க்கையில்  எந்தவித்திலும்

பிரகாசிக்காமல் செய்துவிடும்.  கிரகங்கள் நல்ல ஸ்தான பலம், உச்சபலம்,

ஆட்சிபலம்  பெற்ற நிலையில் ஜாதக அமைப்பு இருந்தாலும்

கிரகங்களின்  பலமான நிலை  வேலை செய்யாது.  இந்த தோஷமானது

பிதுர், மாதர், வழி சாபத்தால்  ஏற்பட்டு, தொடர்ச்சியாக, அடுத்து அடுத்து

நம் வாரிசுகளை  ஆக்கிரமிப்பு செய்து  குழந்தைகளின்  வாழ்க்கை

கேள்விக்குறி  ஆகிவிடும்.  ராஜ சர்பங்களை  கூண்டோடு  அழித்த  பாவத்தின்

தொடர்ச்சியாகவும், இந்த தோஷம்  ஒரு  குடும்பத்தை  ஆட்கொண்டு

ஆட்டிப்படைக்கும். கால சர்பயோகம் என்பது  இதற்கு  நேர்மாறாக,

ஜாதகர் சிறப்பாக  இருப்பார்.   வெளியில் அமர்ந்த கிரகத்தின் திசையை

தொடர்ச்சியாக, பெறுவார்களேயானால்  மிக பெரிய யோகத்தை ஜாதகர்

பெறுவார்.  இதை போக்கிக்கொள்ளும் பரிகாரம்  உண்டா என்றால்

உண்டு என்ற  பதிலே  உண்மை.கடுமையான சிரத்தையுடன்  செய்யும்

பரிகாரத்தின் மூலம் இதனில் இருந்து  விடுபட  ராகு,கேது  பகவான்கள்

அருள்பாலிக்கட்டும்  பெரும்பாலான, திருமண, புத்திர தோஷங்கள்,  சூன்யமான

வாழ்க்கை நிலை, இந்த தோஷத்தால்  உண்டாகுபவையே!!!!!




No comments:

Post a Comment