Saturday, 12 August 2017

குரு பெயர்ச்சி என்ன செய்யப்போகின்றார் ?

கால புருஷ தத்துவத்தின் படி  குருபகவான்  பாக்கிய ஸ்தானத்தையும் விரைய

ஸ்தானத்தையும்  பொறுப்பு ஏற்று பலன்  அளிக்க உள்ளார்  இவர் கடகத்தில்

உச்ச நிலையும்  மகரத்தில் நீச்ச நிலையும்  அடைந்து மானுடருக்கு பலன்கள்

அளித்து வருகின்றார்.  இவருக்கு பகை வீடு துலாம்.  அந்த வீடுக்கு  தான்

இபபொழுது  செல்ல விருக்கின்றார். இங்கு  இவர்  சித்திரை  சுவாதி விசாகம்

நக்ஷத்திரங்களில்  நகர்வு செய்து  பலன் அளிக்க  வுள்ளார். சித்திரையில்

அமர்ந்து  பலன் அளிக்கும் போது   குரு  மங்கள யோகம்  பெற்று  சிறப்பான

பலனை  அளிக்க உள்ளார்கள்  அடுத்து  சுவாதி நக்ஷதரத்தில்  அமர்வு செய்து

பலன்  அளிக்கும் போதுகுரு சண்டாள  யோகம் பெற்று  பலன் அளிப்பார்கள் .

அது  அவ்வளவு சிறப்பு  இல்லை.  அடுத்து  தன்னுடைய  சொந்த  நக்ஷத்

திரத்தில்   சிறப்பாக அமர்ந்து  அற்புதமான  பலன் அளிக்க வுள்ளர்கள்.

தன்னுடைய பார்வை பலத்தால்   கும்பராசி அன்பர்களுக்கும் மேஷ ராசி

அன்பர்களுக்கும்  மிதுன ரசியன்பர்களுக்கும்  அற்புதமான பலன்களை

வாரி வழங்க உள்ளார்கள்.  ஸ்தான பலத்தால்  மேஷம், மிதுனம், கன்னி

தனுர் ராசி அன்பர்களுக்கும்,  கும்ப ராசி காரர்களுக்கும்  நல்ல பலன்களை

வருகின்ற  குருபெயர்சியில் இருந்து ஓராண்டுக்கு  வழங்க உள்ளார்கள்.

சித்திரை மற்றும் விசாக அமர்வில் இருக்கும் போது  நல்ல பண்களையும்

சுவாதியில்  இருக்கும் போது  சற்று சுமாரான  பலன்களையும்  அளிக்க

உள்ளார்கள்.பரிகாரம் செய்து கொள்ள  வேண்டிய  ராசிக்காரர்கள்  ரிஷபம்,

கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம் மீனம்.

வியாழக்கிழமைகளில்  விரதம் இருந்து சுத்தம் கடை பிடித்து  பிராமண

போஜனம்,வேதபண்டிதர்களுக்கு  தானம்,  வைதீகர்களுக்கு  வஸ்த்ர தானம்

வேத பாட சாலைகளில்  விருந்து கொடுத்து  உபசரித்தல்,  யானை

தரிசனம்  தக்ஷினாமூர்த்தி   வழிபாடு  இவைகள் பலன்   அளிக்கும்.

வசதி  உள்ளவர்கள்  மஞ்சள்  கல்  TOPAZ  வாங்கி   தானம் செய்யலாம்.

மஞ்சள்  நிற ஆடை, பட்டு  வாங்கி  எளியோருக்கு  தானம் செய்யலாம்.

குரு காயத்ரி தினமும்  சொல்லி வாருங்கள்.  குருமாரை  போற்றி வணங்குவோம்.  கனக புஷ்பராகம்  ஒன்று மூன்று ஐந்து ஒன்பது கரெட்டுகள்

வாங்கி  தங்க  மோதிரத்தில் அணியலாம். வசதி உள்ளவர்கள். திரு செந்தூர்

சென்று முருக பெருமானை தரிசித்து  வாருங்கள். ஆலங்குடி,தென்திரு

திட்டை  சென்று குரு பகவானை  தரிசனம்  செய்து வாருங்கள். குரு தெசை,

குருபுக்தி,  நடைமுறையில்  உள்ளவர்களுக்கு  பலன்கள் கூடுதலாக,  நடக்க

வாய்ப்புகள்  உண்டு என்றாலும்,  கோச்சாறமும்  சேர்ந்து  வேலை செய்யும்.

எப்படி இருப்பினும்  குருபகவான்   நல்ல பலன் தர,  அனுதினமும்  அவரை

போற்றுவோம்.


No comments:

Post a Comment