Wednesday, 28 February 2018

பரீட்சைஎழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்

இவ்வாண்டு  2018 ல்  பரீட்சை எழுதப்போகும் மாணவ செல்வங்களுக்கு,

எம்முடைய  வாழ்த்துகள்.  சோர்வின்றி,பயிலுங்கள்.  மனதில் நிறுத்தி

பயிலுங்கள்.  மிதமான, குளிர்ச்சியான,நீர்சத்து,நார்சத்து, மிகுந்த,

உணவினை,உண்டுவாருங்கள்,  அசைவ உணவை  உண்ண,

வேண்டாம்..  எளிதில் ஜீரண மாகும்  உணவை,  சாப்பிடுங்கள்.  நிறைய,

தண்ணீர் பருகுங்கள்.  விளையாட்டு,போட்டிகளில், கலந்துகொள்வதை,

தவிர்த்துவிடுங்கள்.   உங்கள் வீட்டில் விவாதம்  செய்வதை தவிருங்கள்.

தியானம்  செய்ய தெரிந்தால், செய்யுங்கள்.  நண்பர்களிடம்,அரட்டை,

அடிப்பதை,  தவித்து விடுங்கள்.  ஹயகிரீவரை,  வேண்டி  தியானம்

செய்து  வாருங்கள்.  அமைதியாக,  பயமின்றி,  தூங்குங்கள்.   பரீட்சை

எழுத  பயன்படுத்தும், பேனா,பென்சில்,  போன்றவற்றை,  நல்ல நிலையில்

வைத்துகொள்ளுங்கள்.  அந்த  உபகரணங்களை   போற்றி வணங்கி,

பயன்படுத்துங்கள்.   வெற்றி நிச்சயம்.  வாழ்த்துகள்.


ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு ஜெயேந்திரசரஸ்வதிஸ்வாமிகள் முக்தி அடைந்தார்

ஸ்ரீ காமகோடி காஞ்சி ஜகத் குரு ஜெயேந்திர சுவாமிகள் ஈசனின்  பாதகமலத்தில்

ஐக்கியமானார்.  அவரது திருவருளை,அன்றாடம்,பெற்று வாழ்வில், உயர்வு,

பெற்றோர், பல லக்ஷம் மக்கள். அத்தகைய,ஆன்மீக,சிந்தனையாளர்களின்,

வாழ்வில் அருளாசிகள்,தொய்வு இன்றி,கிடைக்கபெற்று,  நல்வாழ்வு,வாழ்ந்து,

அருளும் ஞானமும்,ஒருங்கே,இணைந்து பெற்று, வாழ  இன்றைய

பேர்அருளாளராகிய

  காஞ்சிமடத்தின்,  அருட்பெறும் ஜோதியாக,விளங்கும்,ஸ்ரீ காமகோடி

 விஜயேந்திரர், ஸ்வாமிகள்,  திடமான,சிந்தனைகளோடு, நின்று

அவர் வழியை பின் பற்றி, ஆஸ்தீக அன்பர்களுக்கு, அருள்பாலித்து,வழி

 நடத்தட்டும்.  அடியார்தம் திருவடிகள் போற்றி போற்றி.போற்றி......

Wednesday, 21 February 2018

திரு. கமலஹாசன் தமிழக முதல் அமைச்சர்ஆவாரா?

திரு கமல்ஹாசன்  நேற்று மதுரையில் தன்னுடைய கட்சியின் கொடியை

ஏற்றி  வைத்து கட்சியின் பெயரையும் அறிவித்தார்.  வாழ்த்துகள்.

அவர் கட்சியின் பெயரை அறிவித்த நேரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு

அவருடைய கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அவர் முதல் அமைச்சர்

ஆவாரா? என்பதை ஜோதிட ரீதியில்  ஆய்வு  செய்து  இந்த கட்டுரை

சமர்பிக்கப்படுகின்றது..  அவருடைய  உண்மையான ஜாதகம்  நம்மிடம்

இல்லை என்கின்றபடியால்,இந்தமுறையை  கையாண்டு பலன் கூற முயற்சி

செய்து இருக்கின்றோம்.

எம் அறிவுக்கு எட்டிய வகையில், இம்முறையில்  கணித்து  பலன் கூறும்

நிலை முற்றிலும்  சரியாகவே இருக்கும் என்று  யாம் நம்புகின்றோம்.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட நேரம்,  கமலஹாசன்  முடிவுசெய்து வைத்த  6 மணி

என்பதுகூட சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன், இருப்பினும்சூரியனையே

பிரதானமாககொண்டதொழில்,அரசாங்கம்,அரசாங்கத்தை அமைக்கும் கட்சி

கொடி ஏற்றுதல்,மற்றும்,கட்சிபெயர் வெளியீடு,என்றசெயல் கள்,அனைத்தும்
.
செய்யவேண்டிய நேரம்,காலம்,பகல் நேரமாகவே இருக்கவேண்டும் .

இதை  குறிப்பிட்டு  சொல்ல,வற்புறத்தி கூற, அரசியல் ஆலோசகர்களுக்கு,

ஞானம்இல்லை போலும். குறைந்த பட்சம்,சூரிய அஸ்தமனத்துக்கு,

06.28  மணிக்கு முன்பாகவே,  கொடி ஏற்றம்,மற்றும் கட்சியின் பெயர்,அறிவிப்பு

 இருந்து இருக்க வேண்டும்.  அவைகளையும், தவிர்த்துவிட்டு  பகுத்தறிவு,

கொள்கையின்பால்,பற்று கொண்டு,நம்பிக்கை வைத்து, கட்சியை துவங்கி

வைத்துள்ளார்.  இடித்து சொல்லும்கருத்துகளை,ஏற்காமல், செயல் படும்

மன்னனாக,வர முயற்சிக்கும்,  தலைவரோ என்று எண்ணுகின்றோம.


 சூரிய ஹோரை அமைந்து இருக்கும்.  காலம்  தாமதமாகி, அவரை,இயற்கை,

ஏழு மணிக்குமேல் கொண்டுசென்று விட்டது.  அது சுக்கிர ஹோரையாக

அமைந்தபடியால், மகிழ்ச்சி கொண்டாட்டம்,கூட்டம் இதற்கு பஞ்சம்

 இருக்காது, என்றுஎடுத்துக்கொள்ளலாம்

அரசு அரசாங்கம் இவைகளை  நிர்ணயிக்கும்,ஹோரை சூரிய ஹோரையே

 ஆகும்.  இதனை இவர்  உபயோகிக்க தவறிவிட்டார்.

அனைத்து கிரகங்களும் , சப்போர்ட் ஆக இருக்கும் நிலையில் சூரியன்

பெருமளவு சப்போர்ட் செய்ய வில்லை என்பதே உண்மை.

சூரியனின் ஆதரவு,  பெருமளவு,இருக்க வேண்டும்.  அடுத்தபடியாக,

செவ்வாய்  அற்புதமாக இருக்க வேண்டும்.  இவைகளே ஒருவரை அரசு கட்டி

கட்டிலில் ஏற்றும்..   இவருடைய ஜாதகம்,சப்போர்ட் பண்ணும் பட்சத்தில்,

 இவருடைய

முயற்சிகள்  வெற்றி அடைய வாய்ப்புகள் இருக்கலாம். எப்படி இருப்பினும்,

கமலஹாசனுக்கு  எம்முடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள் மற்றும்

 ஆசிர்வாதங்கள்.   யாம் இதனில் வெளியிட்டுள்ள ஜாதகம் எம்முடைய

 ஜோதிட பலனை  ஊர்ஜிதம் செய்யும்.






Saturday, 3 February 2018

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கடைகள் எரிந்தவை தெய்வ குற்றமா?

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கடைகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு

தீ பிடித்து  சேதப்பட்ட நிகழ்வு  ஜோதிட ரீதியில்  ஆய்வு செய்யப்பட்டபோது

கீழ் கண்ட  பலன் களை   காண முடிகின்றது   கீழே ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது.



தீ பிடிக்க ஆரம்பித்த  நேரம்  10.44  என்று எடுத்துகொள்கையில், பலன் கீழ்கண்டவாறு  இருக்கலாம் என்று  ஜோதிடகணிப்பு  கூறுகின்றது.

லக்ன பாவம்,  மூன்றாம் பாவம், ஏழாம்பாவம் ஒன்பதாம் பாவம்

கடுமையாக  பாதிக்கப்பட்டு  இருந்தமையால்.  இந்த பாதிப்பு  ஏற்பட்டு இருக்கலாம்.

மேற்கண்ட பாதிப்பு  செவ்வாய்  கிரகத்தால் ஏற்பட்டதாக  யாம் கணிக்க முடியவில்லை  ராகு பகவான் கடுமையாக  பாதிக்க  பட்ட நிலையில் உள்ளார்.

கூட்டான  பேர் அழிவு  கோரவிபத்து, பொதுமக்கள் கூடுமிடங்களில் விபத்து,
கூட்டான பொதுமக்கள் பாதிப்பு, இவை அனைத்துக்குமே காரணகர்த்தா,

ராகு தான்.  புக்தியை  நடத்துகின்றார்.  ராகுவே காரணம்.

இது புதனுக்கு உரிய ஸ்தலம்  என்ற வகையில் புதன் கடுமையாக

பாதிக்கப்பட்டு  தொடர்பினால் பாதிப்பில் நிவாரணம் அடைகின்றபடியால்  வியாபார ஸ்தலங்கள்  பெரிதும்  பாதிப்படையாமல் காக்கப்ட்டதாகவே
எடுத்துக்கொள்ள வேண்டும்.

 மேலும் புதன் பாதிக்கப்பட்டு,  அதனால் சீற்றம் அடைந்த நிலையில்அ ம்பாள்

இருப்பதால்  மதுரையில் உள்ள வியாபாரிகள்  இணைந்து சுந்தரேஸ்வரருக்கும், அம்பாளுக்கும்
ராகு கால துர்க்கைக்கும்  பரிகார நிவர்த்தி செய்தால். மதுரை வாழ் வியாபாரிகளுக்கும்,அங்கு  வாழுகின்ற மக்களுக்கும் நல்லது.  பரிகாரங்கள்
செய்து முடிப்பதற்குள்  நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள்

பரப்புரை வழங்க துவங்குதல் நன்மை பயக்காது. இது சத்தியம். உண்மை.
அம்பாள்  தன் கணவர் பாதிக்க பட்ட தாலே  கோவமாக இருக்க வாய்ப்புகள் உண்டு..
தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு எதவும் வந்துவிட வாய்ப்பு இல்லை என்று நாமும் நம்புகின்றோம்.   தமிழகம்  நன்கு செழிப்புடன் இருக்க பிரார்த்திக்கின்றோம்.