Saturday, 3 February 2018

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கடைகள் எரிந்தவை தெய்வ குற்றமா?

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கடைகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு

தீ பிடித்து  சேதப்பட்ட நிகழ்வு  ஜோதிட ரீதியில்  ஆய்வு செய்யப்பட்டபோது

கீழ் கண்ட  பலன் களை   காண முடிகின்றது   கீழே ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது.



தீ பிடிக்க ஆரம்பித்த  நேரம்  10.44  என்று எடுத்துகொள்கையில், பலன் கீழ்கண்டவாறு  இருக்கலாம் என்று  ஜோதிடகணிப்பு  கூறுகின்றது.

லக்ன பாவம்,  மூன்றாம் பாவம், ஏழாம்பாவம் ஒன்பதாம் பாவம்

கடுமையாக  பாதிக்கப்பட்டு  இருந்தமையால்.  இந்த பாதிப்பு  ஏற்பட்டு இருக்கலாம்.

மேற்கண்ட பாதிப்பு  செவ்வாய்  கிரகத்தால் ஏற்பட்டதாக  யாம் கணிக்க முடியவில்லை  ராகு பகவான் கடுமையாக  பாதிக்க  பட்ட நிலையில் உள்ளார்.

கூட்டான  பேர் அழிவு  கோரவிபத்து, பொதுமக்கள் கூடுமிடங்களில் விபத்து,
கூட்டான பொதுமக்கள் பாதிப்பு, இவை அனைத்துக்குமே காரணகர்த்தா,

ராகு தான்.  புக்தியை  நடத்துகின்றார்.  ராகுவே காரணம்.

இது புதனுக்கு உரிய ஸ்தலம்  என்ற வகையில் புதன் கடுமையாக

பாதிக்கப்பட்டு  தொடர்பினால் பாதிப்பில் நிவாரணம் அடைகின்றபடியால்  வியாபார ஸ்தலங்கள்  பெரிதும்  பாதிப்படையாமல் காக்கப்ட்டதாகவே
எடுத்துக்கொள்ள வேண்டும்.

 மேலும் புதன் பாதிக்கப்பட்டு,  அதனால் சீற்றம் அடைந்த நிலையில்அ ம்பாள்

இருப்பதால்  மதுரையில் உள்ள வியாபாரிகள்  இணைந்து சுந்தரேஸ்வரருக்கும், அம்பாளுக்கும்
ராகு கால துர்க்கைக்கும்  பரிகார நிவர்த்தி செய்தால். மதுரை வாழ் வியாபாரிகளுக்கும்,அங்கு  வாழுகின்ற மக்களுக்கும் நல்லது.  பரிகாரங்கள்
செய்து முடிப்பதற்குள்  நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள்

பரப்புரை வழங்க துவங்குதல் நன்மை பயக்காது. இது சத்தியம். உண்மை.
அம்பாள்  தன் கணவர் பாதிக்க பட்ட தாலே  கோவமாக இருக்க வாய்ப்புகள் உண்டு..
தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு எதவும் வந்துவிட வாய்ப்பு இல்லை என்று நாமும் நம்புகின்றோம்.   தமிழகம்  நன்கு செழிப்புடன் இருக்க பிரார்த்திக்கின்றோம்.



No comments:

Post a Comment