Saturday, 29 April 2017

குருஹோரையில் என்ன பண்ணலாம்?

குரு ஹோரை:    இது ஒரு அற்பதமான  ஹோரை. இந்தஹோரையில்
எல்லாவிதமான   சுப காரியங்களும் செய்யலாம்..  திருமணம்,நிச்சயதார்த்தம்
வளைகாப்பு,சீமந்தம்,  கிரகப்ரவேசம்,  பிரயாணம்,சேமிப்பு பதவிஏற்பு
பால்குடம் எடுத்தல், வேண்டுதல் நிறைவேற்றுதல்,  துணிமணி வாங்குதல்,
மருந்து உண்ண ஆரம்பித்தல்,  ஆஸ்பதியில் சேர்த்தல்,  குழந்தை பிறப்பு
                                               வங்கியில்  சேமிப்பு துவங்குதல். விருந்தாளி உபசரித்தல்
குருவோடு  பேசுதல், குருவை சந்தித்து  ஆசி பெறுதல்,  அப்படி எல்லா
காரியங்களும் செய்திட செழிப்போடு  வளர்ந்து வரும்..  பூமியில்
விதை விதைக்கலாம்.  கருத்தரிப்பு  சோதனை செய்யலாம்.
மாமிசம் மது,மாது  இந்த ஹோரையில்  ஆகாது.  குருநீச்சமான 
ஜாதகருக்கு,இந்த ஹோரை பலன்   தருவதில்லை.  ரிஷபம்,துலாம்,
மிதுனம், கன்னி   இந்த ராசிகளில்  குரு  அமர்த்த  ஜாதகர்களுக்கு குரு
பலன் தருவதில்லை. குரு கேந்திராதிபதிய  தோஷம் உள்ள  ஜாதகர்களுக்கு
குரு  நல்ல பலன்  அளிக்காது..  குரு  சண்டாள  யோக  ஜாதகருக்கு குருஹோரை பலன் தருவதில்லை.  குரு 6,8,12 இல்  மறைந்து  திசை  புக்தி
நடத்தும் ஜாதகருக்கு  குருஹோரை பலன்  தருவதில்லை.எல்லாவற்றிற்கும்
மேலாக  ஆசாரம்  குறைந்து,சுத்தம் இல்லாமல்,வாழ்பவனுக்கும்  குரு
ஹோரை  பலன் தருவதில்லை.   குருவை  போற்றி  வணங்குவோம்.

Tuesday, 25 April 2017

புதன் ஹோரை என்ன பண்ணும்?

புதன்  அறிவுசார்ந்த  பண்புகள் செயல்கள்  நிறைந்த  காலம். புத்தகம்
படிக்கலாம்,  கவிதை,கட்டுரைகள்,எழுதலாம். தகவல் அளிக்கலாம்.
தகவல் பரிமாறிக்கொள்ளலாம்,  சிலேடையாக பேசிக்கொள்ளலாம்
கிண்டலடித்து பேசிமகிழலாம்,  குறிப்பு எடுத்து வைத்துகொள்ளலாம்.
கதை வசனம்,எழுதி வைக்கலாம்,  ஜோதிடம் கற்கலாம்.
                                 ஜோதிடம் கூறலாம், யூக வணிகம்செய்யலாம்.
கோள்மட்ட்டிமகிழலாம்..  வரையறுத்த நிலையில்  பிளான் போடலாம்.
ஞாயிரு கிழமைகளில், அதிகர்களிடம் காரியம் சாதிக்கலாம்
செவ்வாய் கிழமைகளில் சண்டை மூட்டி  வேடிக்கை பார்க்கலாம்.
வெள்ளிகிழமைகளில்,  சந்தோஷமான  வைபவங்களில்  கலந்து மகிழ
திட்டம் தீட்டலாம்.  அழகான  படங்கள் வரைந்து  மகிழலாம். வியாழன்
அன்று  புதன் ஹோரையில்  பணத்தை  பெருக்க  உண்டான வழியை
தேடிக்கொள்ளலாம்..  திருமண  பேச்சுவார்த்தை  வெள்ளிகிழமைகளில்
செய்யலாம்.  எல்லா வற்றுக்கும்  மேலாக  அரசியலில்  பிரகாசிக்கலாம்
ஒருவருடைய  ஜாதகத்தில்  நல்ல  நிலையில்  இருப்பின்,  யாராலும்
தீர்த்து வைக்கமுடியாத  பிரச்சனையை  புதன்  தீர்த்து வைப்பார் புதன்
ஹோரையில்.

Friday, 21 April 2017

செவ்வாய் ஹோரை என்ன பண்ணும்?

செவ்வாய்  ஹோரை:   இது முரட்டு தனமான  சுபாவம் கொண்டகாலம்.
போரிடுதல்,சண்டை,வம்பு,  குத்து,கொலை,  தீஇடுதல்,வன்முறை,
வாக்குவாதம்,அடிதடி, மோதல்,இரத்தம் சிந்துதல், வன்முறை, பெரிய
கோர விபத்து,  பூகம்பம்,  இயற்கை சீற்றம்  உயிர்  சேதம், கருசிதைவு
வன்கொடுமை,  அகோரசாவு,  இவைகளுக்கு  சொந்தம் கொண்டாடும்
நேரம்தான் செவ்வாய்  ஹோரை.  இந்தகாலத்தில்   நல்லகாரியத்துக்கு
ஏற்றதுஅல்ல.
                                அனுதினமும்  இந்தஹோரை வந்து சென்று கொண்டுதானே
இருக்கின்றது.  என்று  நீங்கள் கேட்பது புரிகின்றது.  உலகின்  எதோஒரு மூலையில்மேலசொல்லப்பட்ட நிகழ்வுகள்  நடப்பது  உண்மை..
எனவே  அன்றாடவாழ்கையில்  இந்த கோரையில் சுமூகமான பேச்சு வார்த்தை  பேசி  தீர்வுகாணும்  விஷயங்கலிலாவது  இந்த ஹோரையை
தவிர்த்து விடுதல்  நல்லது.  சந்திராஷ்டமும், இந்தஹோரையும்  சேர்ந்து
அமையும் காலம், நமக்கு  நிச்சியமாக  சோதனை தரும்  தப்பிக்கமுடியாது.
அறிந்துசெயல்பட்டால்,பாதிப்பின் அளவு  குறைய  வாய்ப்புகள்  உண்டு.
இரத்த  தான  கூட்டமைப்பு, இரத்த செமிப்பு  நிலையத்தில் சாதகம் புரியும்.
அறுவை  சிகிட்சை  செய்பவர்கள்  இந்தஹோரையில்  செய்யலாம்.
.

Thursday, 20 April 2017

சந்திர ஹோரை என்ன செய்யும்?

சந்திர ஹோரை:   இது ஒரு நுட்பமான மதி சம்பந்தப்பட்ட ஹோரைஆகும்.
                                       இதனைநாம்  சர்வ ஜாக்கிரதையாக  பயன் படுத்தணும்
                                        கரணம்  தப்பினால் மரணம் என்பதுபோல்  சற்று
                                        அலட்சியமாக  இதனை உப யோகித்தால்  நம்மை
                                         சரியாக  பதம் பார்த்து விடும்.
                                          இந்த ஹோரை  இரண்டு  விதமாக பயன் படுத்தலாம்.
                                           தேய்  பிரைகாலங்களில்  இந்த ஹோரையை  கெடுதல்
                                            செய்கின்றவை,  செய்விப்பவை,  துஷ்டகர்மாக்கள்,
                                             செய்வினை,  போன்றவிற்றுக்கு  துல்லியமாக
                                              பயன்படுத்துவார்கள்.பொதுவாக  ஜாதகர்கள்
                                              இதனை தவிப்பது  நல்லது. பொதவாக  இந்தஹோரை
                                               இரவு நேரங்களில்,  பௌர்ணமியில்
                                                 மிகவும்  பலம்  வாய்ந்ததாக  இருக்கும்..
                                                வளர் பிறையில்  சுப முஹுர்த்த பேச்சு, பெண்
                                                பார்த்தல்,  ஆழ்குழாய்  மற்றும்  கிணறு  தோண்டுதல்
                                                 மருந்து  உண்ணுதல்,  இரத்த  சுத்திகரிப்பு  நிகழ்வுகள்
                                                 க்ரகப்ரவேசம்,  பால்  காட்சுதல்,  முலைப்பால்மருந்து
                                                 தயாரித்தல்,  அரிசி  சேமிப்பு கிடங்கு  வைத்தல்
                                                பார்வதிக்கு  பாலால்  அபிஷேகம்  செய்தல்.
                                                  வெண்பட்டு  தறி நெய்தல்,  வெண்பட்டுஆடை
                                               உடுத்தி  மகிழ்தல.  பெண் அலுவலரை சந்தித்து
                                               காரியம் சாதித்தல்.   கண்ணாடி வாங்கி  அணிதல்.
                                                  பெண்குழந்தையை  போற்றி  ரசித்தல்.
                                                  விதவிதமான  முத்து  மாலை  அணிந்து
                                                  மகிச்சி   பெறுதல்.  கடலில்  முத்துக்குளித்தல்
                                                   வட்டிகடை  வியாபாரம்  துவங்குதல்.இப்படி
                                                  அநேக  நற்  பலன்கள்   பலவற்றை  செய்ய  இந்த
                                                 ஹோரை  உகந்தது.  சித்தபிரமை நோய் நீங்க
                                                  பரிகாரம்  செய்து  பலன்  பெற  அற்புதமான காலம்
                                                  பயன்  பெற வாழ்த்துகள்......................

Tuesday, 18 April 2017

சூர்ய ஹோரையில் என்ன செய்யலாம்?

நோய் நீக்கும் மருந்துகள்  தயாரிக்கலாம். மருத்துவரை சந்தித்து
சிகிச்சை எடுக்கலாம். அரசு காரியம் தொடர்பாக அப்ளிகேஷன்
போடலாம். அரசுஅதிகாரிகள், மந்திரி  போன்றோகளை சந்திக்கலாம்.
கிழக்கு நோக்கி  பயணிக்கலாம். கண் மருத்துவரை  சந்திக்கலாம்.
தகப்பனார்  தொடர்பான  தஸ்தாவேஜ்கள் சொத்து சம்பந்தமான
பேச்சு வார்த்தைகள்  நடத்தலாம். சிவன்கோவிலுக்கு சென்று
பிரார்த்தனை  செய்யலாம். ஞாயிரு அன்று  இந்த வேளையில்
இரெட்டிப்பு பலன் கிடைக்க  வாய்ப்புகள் உண்டு. பெண்கள், ஆண்களை
தேடிசென்று பார்க்க  வாய்ப்புகள் அதிகம்.  ஆண்  குழந்தைகள்  பிறப்பு
சாத்தியமானது. மலை காடுகளில் அலைந்து  திரியலாம்.
                                 சிம்ம  ராசியில்  பிறந்தோருக்கு  யோகத்தை  தரும்
மேஷத்தில்  பிறந்தோருக்கு  நல்லபலன் தரும். கன்னியில்  பிறந்தோருக்கு
ஒத்துவராது. இருப்பினும்  மாசி  மற்றும்  சித்திரையில் நல்ல பலன்கள் கிடைக்கும். மகர ராசிகாரர்களுக்கு ஒத்து வராது.இருப்பினும் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
                               நிறைய இருக்கு சொல்லிகிட்டே போகலாம்.புத்தகம் போட்றேன் வாங்கி படிங்க.

Saturday, 15 April 2017

குரு இல்லாத எந்தவித்தையும் பாழ்........

குரு இல்லாத எந்த வித்தையும் பாழ். உண்மை தான்.
எப்படி?  மருத்துவம், ஜோதிடம், யோகா, சண்டைபயிற்சி, ஓட்டபந்தயம்
இசை,  டான்ஸ்,  இப்படி  எதை எடுத்துக்கொண்டாலும், குருவின்
ஆசீர்வாதம்  இல்லாமல் பயிற்சி  இல்லாமல் நாமே சுயமாக கற்றுக்
கொள்ளும்  முயற்சி,  அதை பிறர் முன்  செய்துகாட்டும் வித்தை
நமக்கு  அவமானத்தை உண்டுபண்ணுவதோடு  கலைக்கும்  இகட்சியை
உண்டுபண்ணும், சிலசமையம்,  விபரிதமான  விளைவுகளையும்
உண்டுபண்ணும்.
                                     முறையான படிப்பு மற்றும்  பயிற்சி,குருவின்
உபதேசம் பெறாத  ஜோசியர்கள்  தான் படித்த  புத்தக அறிவையே
மூலதனமாக  கொண்டு,  மேதாவித்தனத்தால்,  பொதுமக்களில்
பலருடைய,  வாழ்கையில்  விளையாடி  சின்னபின்னமாக்கி, தான்
கெட்டபேர்  எடுப்பதுடன்  நிற்காமல்,  ஜோதிடக்கலையின்  மீது, அவப்பேர்
வாங்கி கொடுத்து  வருகின்றனர்.
                                           இக்கலை,இன்று  இந்தியாவில்,  ஒரு சில பல்கலை
கழகங்களில்  முறையான வழிமுறைகள்  மற்றும்  விதிமுறைகள்
பின்பற்ற பட்டு  உரிய  தகுதியான  ஆசிரியர்களை  கொண்டு  போதிக்கப்பட்டு
சிறப்பான முறையில்  பயிற்றி விக்கப்பட்டு  வருகின்றது.
                                             இன்று  எதோ  ஒருகல்வியில், தாங்கள் பெற்ற
முதுகலை  மற்றும், ஏனைய பட்டங்களை  தன்னுடைய  பெயருக்கு
பின்னால் போட்டுக்கொண்டு,  தன்னுடைய பிற படிப்பு மேதாவி தனத்தை
இக்கலையில்  பயன்படுத்தவது,  மக்களை ஏமாற்றும், மற்றும்
இந்த  கலைக்கு இழைக்கும்  துரோகமுமாகும்.  இறைவனுக்கு
இழைக்கும்   அபசாரமுமாகும்.  ஜோதிடக்கலையை  முறையாக
பயின்று, நன்குதேர்ச்சி பெற்ற  குருமார்களை  கொண்டு  அறிந்து
இந்த உலகில்  இக்கலைக்கு  அங்கீகாரம்  செய்வதோடு,  நாமும்
புகழும்  பெருமையும் அடைவோம்.   வாழ்த்துகள்.

Thursday, 13 April 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் ஹேவிளம்பி வருடம்

இந்த புத்தாண்டு  பிரமாண்டம் நிறைந்ததாக  இருக்கும்.
தனிநபரின்  வருமானம்  மறைமுகசேமிப்பு  சற்று கூடுதலாக இருக்கும்.
பிரயாணங்களின் மூலம்  சம்பாத்தியம்  கொஞ்சம் பரவாயில்லை.
தகவல் தொழில்நுட்பத்  துறை   போராட்டத்துடன் வளர்ச்சி அடையும்.
கல்வி நிறுவனங்கள் போராடிவளர்ச்சி  மேற்கொள்ளும்.
காதலர் பாடு தான் கொண்டாட்டம்.  மகிழ்ச்சி   வெள்ளம்தான்..
கடுமையான்  உழைபாளிகள் பாடுதான்   சற்று   சங்கடம்தான்.
அரசு ஊழியர் பாடு கொண்டாட்டம்தான். மருத்துவர்கள் பாடு ஏற்றம் தான்
தங்கம விலையில் ஏற்றம் உண்டு.  மாணவர்கள்  கல்வியில் போராடி வெற்றி
பெற்று விளங்குவார்கள் போலிசாரின்  குடும்பத்தில் மகிழ்சசி  தாண்டவமாடும்
பெருமாளுக்கு, விநாயகருக்கு,  ஆஞ்சநேயருக்கு   கொண்டாட்டம்தான்.
வெளிநாட்டில் பிழைக்க வழிதேடுவோர்  எதிபாராத விதமாக  முன்னேறுவார்கள்
அமெரிக்கா விசா  கெடுபிடியை தளர்த்தும்.  அரபுநாடுகளுக்குபாயும்
கூட்டம் அதிகரிக்கும்  மது  விற்பனையில் சரிவு தான்.
எல்லாம் கலந்த ஆண்டாக இருக்கும்.  தண்ணீர் பஞ்சம்  வந்து நீங்கும்.
வாழ்த்துகள்.


Wednesday, 12 April 2017

பன்னிரெண்டாம் பாவம் பயமுறுத்துதா?

12 ம்  பாவம்  பற்றி  சிலவரிகள்:     மரபு வழி  ஜோதிடத்தில்  அயன
சயன  ஸ்தானம்  என்று  சொல்வார்கள்.  மோக்ஷம்  தரக்கூடிய
 இடமென்றும்  சொல்வார்கள்.   இந்த இடத்தில  அமர்ந்த சில கிரகங்கள்  எந்த
 நன்மையும்  செய்யாது.    இந்த  பாவத்தில்  அமர்ந்த சுப கிரகங்கள்
 தீமை செய்வதில்லை.முழுமையாக, மாறாக  நன்மையையும்  செய்யத் தவறுவதில்லை. இந்த இடம் இல்லாமல் ஒருவருடைய
லக்னம்  உருவாவதில்லை. லக்னத்தை நிர்ணயப்பதில்  இந்த இடமே
பிரதான பங்கு  வகிக்கின்றது.  சூரியன் சந்த்ரன்  செவ்வாய்  சனி  சிறப்பை
அளிப்பதில்லை. அந்தரங்க  சுகங்களில்  கோளாறு  தான்.

                                       இங்கு அமர்வு  செய்கின்ற  குரு,  மற்றும்  கேது, ராகு,
நன்மை  செய்ய  தவறுவதில்லை.
சுக்கிரன் கூட  சுப யோக  சந்தோஷத்தை  தருகிறார்.  பெண்கள் மூலம்
கிடைக்கும்  இன்பசுகம்  அபாரமாக கிடைக்க வய்ப்புகள்  உண்டு.
வேறு  தீய கிரகங்கள்  கெடுக்காமல் இருந்தால்  நல்லது.
இன்னும்  எத்தனையோ  சொல்லிண்டே போகலாம்.  இந்த இடமும்
இரண்டாம்  தொழலை  குறிக்கிற, வெளிநாட்டு வாழ்கையை உறுதிபடுத்தும்.
ஞாபகம்  வச்சிகிங்க,  இப்ப உள்ள  சிறுசுகள் மாமனார் மாமியார்  தொல்லையில்  (இருப்பின்)?   அவற்றில்  இருந்து விடுபட
  ஒரே பரிகாரம்  இந்த பாவம்  வேலை செய்ய இளசுகள்  என்ன செலவும்  செய்ய தயார்!!!!!!   எதார்த்தமாக எடுதுக்கிங்க...பிரச்னை இல்லாமல்
வெளிநாடு  சென்று விடலாம்.....

Friday, 7 April 2017

லக்ன பாவம்என்றால் என்ன ?

ஒரு ஜாதகத்தில் ரொம்ப ரொம்ப  முக்கியம் வாய்ந்தது லக்னம்  சூர்யன் அமர்வை
வைத்து  லக்னம்  முடிவு   செய்யப்பட்டு  ஒருஜாதகத்தின்  லக்னம முடிவு
செய்யப்படுகின்றது.
லக்னம் மிகமிக முக்கியம்  வாய்ந்தது.. லக்னம்  தன்னை தானே  இயக்கிண்டு
ஏனைய  பாவங்களையும்  கண்ட்ரோல் செய்து இயக்குகின்றது. லக்ன பாவ
குடுப்பினை   ஜாதகர்ககள் பெற்று  இருக்கவேண்டும்.அந்த ஜாதகமே  சிறந்த
ஜாதகம். லக்ன பாவ  அமைப்பு  எட்டாம்,  பன்னிரெண்டாம்  பாவ  ஈர்ப்பு
இல்லாம இருக்கும்  அமைப்பு  நல்லது.  லக்னம் ஐநது  ஒன்பது பாவ  ஈர்ப்பு
சூப்பர்.  இப்ப  இது போதும்..........

Tuesday, 4 April 2017

அடுத்த டாபிக் என்னவாக இருக்கும் ?


மீன ராசி உங்கள் வாழ்க்கை எப்படி?

மீனம்:                    இராசி மண்டலத்தின் கடைசிராசி.   உபயராசி  நீர்தத்துவ ராசி
                                 நல்ல  கெட்டிக்காரர்.  கழுவின  மீனில் நழுவும் நபர்கள்
                                 பொன்பொருள்  தேடி  வெளிநாடு செல்லும்
                                  பலர் இந்த  ராசிக்காரர்கள்.  நாத்தீகம்  பேசுவார்கள்.
                                   லாஜிக் தேடுவார்கள்.  சுக்கிரன் எதிரி.
                                    சூரியன்  இவர்களுக்கு   வெற்றியும் கொடுப்பார்.
                                    திட்டமிடுவதில் வல்லவர்  வெளிநாட்டுவேலைகளில்
                                    கோடி கணக்கில்  சம்பாதித்து  சொத்து சேர்ப்பார்கள்.
                                     கபடதாரி.  அதிகம் பேசமாட்டார்கள்.புதன்  நல்ல நிலையில்
                                      இவர்களுக்கு  இருக்க வேண்டும்.  இல்லையெனில்
                                      திருமண வாழ்கை சங்கடம் தான்.  அதிக  உடல் உழைப்பு
                                       இல்லாத வேலையாக இருக்கும். வீடு வாசல் எல்லாம
                                       உண்டு.  இலவசம் எங்கு கிடைத்தாலும்  கௌரவம்
                                       பார்த்து  வாங்க மாட்டார்கள்.  நல்லவர்கள் தான்.
                                       எதாவது  பொது இடத்தில  பேசிவிட்டு  முழிப்பர்கள்.
                                       ஒரு நல்ல  தத்துவ  மேற்பார்வையாளர்.
                                        எல்லா ராசிக்காரர்களுக்கும்  லக்னத்தை பொருத்து பலன்
                                        மாறும்.      குட்லக்
                                     
                                     
                                 

கும்பம் ராசிக்காரர் தெரிஞ்சிக்க வாங்க.......

     கும்பம்  ராசி;        தைரியசாலிகள்  நல்ல  புத்திசாலிகள். மனம்
                                         தான் இவர்களுக்கு   எதிரி. சுக்கிரன் தான் இவர்களுக்கு
                                         நண்பனும்  எதிரியும்.  வலிமை,தைரியம்,கொண்ட
                                         போலீஸ்  மற்றும்  வக்கீல்  கோர்ட் இவர்களுக்கு
                                          உறவு  கொண்டாடும்  விஷையங்கள். இரத்த சம்பந்த
                                          நோய்கள்  ஒரு சிலருக்கு பாதிப்பை  உண்டு
                                           பண்ணலாம்.  இந்த ராசியில் பிறந்த சிலர்  கட்ட
                                           பஞ்சாயத்து, மற்றும்  பௌண்ட்சர்  வேலையில்
                                            அமர்கிறார்கள்.  சிம்ம  ராசி  நண்பர்களை  தேடுவார்கள்.
                                            அவர்களால் நன்மையைவிட தீமைதான் அதிகம்.
                                             நல்ல  உழைப்பாளிகளை   நேசிப்பார்கள்.  தனக்கு
                                            பிடிக்க வில்லை என்றால்  அவர்களை ஒழித்துவிட்டு
                                            தான்  மறுவேலை பார்ப்பார்கள். இந்தபலன்கள் யாவும்
                                            மெஜாரிட்டி நபர்களுக்கு பொருந்தும். லக்னம்  பொறுத்து
                                             பலன்கள்  வேறுபடலாம்.  எல்லாம் அவன் செயல்.
                                           

மகர ராசி காரர்உங்களுக்கு எப்படி?

மகரம்;                திட்டம் போட்டு  பதுங்கி எதிரிகளை  துவம்சம்செய்வதில்
                               இவர்களுக்கு  நிகர்  இவர்கள் தான்.  நிரந்தர வாழ்கை
                                தத்துவத்தில்   நம்பிக்கை கொண்டவர்கள்.  வலிமை,
                                குறுக்கு வழி,  இவற்றில்  நம்பிக்கை உண்டு.ரகசியம்
                                 காப்பதில் இவர் கெட்டிக்காரர்கள்.  இவர்கள் இறக்கும்போது
                                 அந்தரங்க  வாழ்க்கை  உலகிற்கு தெரிய வரும்.
                                  பணத்தை  கட்டிக்காத்து  சம்பாதித்து,  பின்பு  குறுக்குவழியில்
                                   ஈடுபட்டுதொலைத்து விடுவார்கள். நல்லவர்களை
                                   நேசிக்க தவறிவிடுவார்கள். பிற்காலத்தில்  ரொம்ப
                                    கழ்டபடுவார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்க
                                    மாட்டார்கள்.  இவர்களிருகின்ற்ற இடத்தில  தண்ணீர்
                                     பஞ்சம்  வரும்.  கலை சார்ந்த வாழ்க்கை நன்றாக
                                     இருக்கும்.  தகப்பன்  சம்பந்தப்பட்ட  வழியில் நிம்மதி
                                      இல்லை.   கண் நோய்  மூளை  சம்பந்தப்பட்டகோளாறுகள்
                                       தோன்றி  மறையலாம்.  நரம்புத்தளர்ச்சி நோய் வரும்
                                       நல்ல நண்பர்களை  தேடுங்கள்  பிடித்து தக்கவையுங்கள்.
                               

தனுர் ராசி அன்பர்களுக்கு.......

தனுர் ராசி;                      இவர்கள்வசிக்கும்  இடம்   மேட்டுகுடி மக்கள்
                                          வசிக்கும்  இடமாகத்தான்   இருக்கும்.  வலியப் போய்
                                          யாரிடமும்   யாசிக்க மாட்டார்கள்.  ரூம் போட்டு
                                          யோசனை  செய்து  கெடுதல் செய்ய  மாட்டார்கள்.
                                          கெடுப்பவர்கள்  பக்கத்தில் இருந்து கோள்  மூட்டி
                                           இவர்களை கெட்டவராக  மாற்ற  வழி உண்டு.
                                            உண்மை  தெரிந்தபின் நேசிப்பார்கள்.  தொழிலில்
                                            மிகவும் சாதுர்யசாலி. செவ்வாய் இவர்களுக்கு
                                            நல்லதும்செய்யும்  கெட்டதும்  செய்யும். பெண்களால்
                                            லாபமும் நஷ்டமும்  உண்டு.
                                             இவர்களில் பலர்  பெருமனான  உடல்வாகு
                                             கொண்டவர்கள்.  சுக்ரன் ரோககாரகனாக இருப்பதால்
                                             மேக நோய்  மற்றும் கொழுப்பு நோய் வருவது
                                              தவிர்ககமுடியாதது. சந்த்ரஷ்டமம்  இவர்களை ஒன்றும்
                                               பண்ணாது.  தொழில்  பிரஸ், புத்தகம், கல்வித்துறை
                                               டீச்சிங்  வேலை, யூக வணிகம்  போன்றவை
                                                 அமையும்.  குழந்தைகளை  பற்றியகவலை உண்டு.

Saturday, 1 April 2017

விருச்சிகம் ராசி அன்பர்களே!!!!

விருச்சிகம்;      காலபுருஷ தத்துவப்படி எட்டாவது  ராசி.  நீங்களே
                                யூகித்துகொள்ளுங்கள்  வெறியோட நின்னு முன்னேருவாங்க
                                 இயற்கை எவ்வளவு தண்டிச்சாலும் திருந்த மாட்டார்கள்
                                 . சூரியன் இவர்களுக்கு சப்போர்ட்
                                 சனிபகவான் கூட சப்போர்ட் தான்.  குரு பகவான் கூட
                                 அனுகூலம்.  செவ்வாய் சப்போர்ட்.  சுக்கிரன் கூட
                                   அனுகூலம்  தான்.  தான் நினைக்கிறது  தான் ரைட்.
                                    அப்பறம் ஏன் இவங்க கஷ்டப் படுறாங்க   பாக்கியதிபதி
                                    சந்திரன்  நீச்சம்.  அதுதான் காரணம்  மற்றபடி நல்லவங்க
                                    வெற்றியாளர்  நினச்ச வேலையைமுடித்து   விட்டு தான்
                                     தூங்குவார்கள். பெரிய செலவாளி போல்  தம்பட்டம்
                                      அடித்கொள்வார்கள்.  அது உண்மை இல்லை. செலவு
                                     செய்ய வேண்டிய இடத்தில செய்யாமல்  வாய்ப்பை
                                      நழுவ விட்டு விடுவார்கள். அரசு அதிகாரியாகவோ
                                      அரசியல்வதியகவோ  இருப்பின்  சக்கைபோடு தான்.