Saturday, 15 April 2017

குரு இல்லாத எந்தவித்தையும் பாழ்........

குரு இல்லாத எந்த வித்தையும் பாழ். உண்மை தான்.
எப்படி?  மருத்துவம், ஜோதிடம், யோகா, சண்டைபயிற்சி, ஓட்டபந்தயம்
இசை,  டான்ஸ்,  இப்படி  எதை எடுத்துக்கொண்டாலும், குருவின்
ஆசீர்வாதம்  இல்லாமல் பயிற்சி  இல்லாமல் நாமே சுயமாக கற்றுக்
கொள்ளும்  முயற்சி,  அதை பிறர் முன்  செய்துகாட்டும் வித்தை
நமக்கு  அவமானத்தை உண்டுபண்ணுவதோடு  கலைக்கும்  இகட்சியை
உண்டுபண்ணும், சிலசமையம்,  விபரிதமான  விளைவுகளையும்
உண்டுபண்ணும்.
                                     முறையான படிப்பு மற்றும்  பயிற்சி,குருவின்
உபதேசம் பெறாத  ஜோசியர்கள்  தான் படித்த  புத்தக அறிவையே
மூலதனமாக  கொண்டு,  மேதாவித்தனத்தால்,  பொதுமக்களில்
பலருடைய,  வாழ்கையில்  விளையாடி  சின்னபின்னமாக்கி, தான்
கெட்டபேர்  எடுப்பதுடன்  நிற்காமல்,  ஜோதிடக்கலையின்  மீது, அவப்பேர்
வாங்கி கொடுத்து  வருகின்றனர்.
                                           இக்கலை,இன்று  இந்தியாவில்,  ஒரு சில பல்கலை
கழகங்களில்  முறையான வழிமுறைகள்  மற்றும்  விதிமுறைகள்
பின்பற்ற பட்டு  உரிய  தகுதியான  ஆசிரியர்களை  கொண்டு  போதிக்கப்பட்டு
சிறப்பான முறையில்  பயிற்றி விக்கப்பட்டு  வருகின்றது.
                                             இன்று  எதோ  ஒருகல்வியில், தாங்கள் பெற்ற
முதுகலை  மற்றும், ஏனைய பட்டங்களை  தன்னுடைய  பெயருக்கு
பின்னால் போட்டுக்கொண்டு,  தன்னுடைய பிற படிப்பு மேதாவி தனத்தை
இக்கலையில்  பயன்படுத்தவது,  மக்களை ஏமாற்றும், மற்றும்
இந்த  கலைக்கு இழைக்கும்  துரோகமுமாகும்.  இறைவனுக்கு
இழைக்கும்   அபசாரமுமாகும்.  ஜோதிடக்கலையை  முறையாக
பயின்று, நன்குதேர்ச்சி பெற்ற  குருமார்களை  கொண்டு  அறிந்து
இந்த உலகில்  இக்கலைக்கு  அங்கீகாரம்  செய்வதோடு,  நாமும்
புகழும்  பெருமையும் அடைவோம்.   வாழ்த்துகள்.

No comments:

Post a Comment