குரு ஹோரை: இது ஒரு அற்பதமான ஹோரை. இந்தஹோரையில்
எல்லாவிதமான சுப காரியங்களும் செய்யலாம்.. திருமணம்,நிச்சயதார்த்தம்
வளைகாப்பு,சீமந்தம், கிரகப்ரவேசம், பிரயாணம்,சேமிப்பு பதவிஏற்பு
பால்குடம் எடுத்தல், வேண்டுதல் நிறைவேற்றுதல், துணிமணி வாங்குதல்,
மருந்து உண்ண ஆரம்பித்தல், ஆஸ்பதியில் சேர்த்தல், குழந்தை பிறப்பு
வங்கியில் சேமிப்பு துவங்குதல். விருந்தாளி உபசரித்தல்
குருவோடு பேசுதல், குருவை சந்தித்து ஆசி பெறுதல், அப்படி எல்லா
காரியங்களும் செய்திட செழிப்போடு வளர்ந்து வரும்.. பூமியில்
விதை விதைக்கலாம். கருத்தரிப்பு சோதனை செய்யலாம்.
மாமிசம் மது,மாது இந்த ஹோரையில் ஆகாது. குருநீச்சமான
ஜாதகருக்கு,இந்த ஹோரை பலன் தருவதில்லை. ரிஷபம்,துலாம்,
மிதுனம், கன்னி இந்த ராசிகளில் குரு அமர்த்த ஜாதகர்களுக்கு குரு
பலன் தருவதில்லை. குரு கேந்திராதிபதிய தோஷம் உள்ள ஜாதகர்களுக்கு
குரு நல்ல பலன் அளிக்காது.. குரு சண்டாள யோக ஜாதகருக்கு குருஹோரை பலன் தருவதில்லை. குரு 6,8,12 இல் மறைந்து திசை புக்தி
நடத்தும் ஜாதகருக்கு குருஹோரை பலன் தருவதில்லை.எல்லாவற்றிற்கும்
மேலாக ஆசாரம் குறைந்து,சுத்தம் இல்லாமல்,வாழ்பவனுக்கும் குரு
ஹோரை பலன் தருவதில்லை. குருவை போற்றி வணங்குவோம்.
No comments:
Post a Comment